அமெரிக்க சனாதிபதி ரம்ப் சீனா மீது நடைமுறை செய்த புதிய 10% இறக்குமதி வரிக்கு பதிலடி வரியாக சீனா தனது புதிய வரிகளை அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிலவகை நிலக்கரி, LNG எரிவாயு மீது 15% புதிய வரியும், மசகு எண்ணெய், விவசாய உபகரணங்கள், பெரிய வகை கார்கள், pickup வாகனங்கள் ஆகியவற்றுக்கு 10% புதிய இறக்குமதி வரியும் சீனா அறிவித்துள்ளது. இந்த வரிகள் பெப்ருவரி 10ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்.
அத்துடன் அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகளையும் சீனா கட்டுப்படுத்தி உள்ளது. இராணுவ ஆயுதங்களுக்கு பயன்படும் tungsten, சூரிய மின் உற்பத்திக்கு பயன்படும் tellurium உட்பட பல உலோகங்களுக்கு சீனாவால் மேலதிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலக tungsten உற்பத்தியின் 80% ஐ சீனாவே செய்கிறது.
தேர்தல் காலத்தில் சீனா மீது 60% புதிய இறக்குமதி வரி அறவிடுவேன் என்று ரம்ப் கூறியிருந்தாலும், நடைமுறை செய்தது 10% புதிய வரி மட்டுமே.