மேற்கின் பெருமளவு அறிவை வட கொரியா திருடியது 

மேற்கின் பெருமளவு அறிவை வட கொரியா திருடியது 

பெருமளவு மேற்கு நாடுகளின் அறிவை வட கொரியா இணையம் மூலம் திருடி உள்ளது என்று வியாழன் அமெரிக்கா, பிரித்தானியா, தென் கொரியா தமது கூட்டறிக்கை ஒன்றில் கூறியுள்ளன. இந்த தாக்குதலுக்கு APT45 என்று பெயரிடப்பட்டுள்ளது.

இராணுவ tanks, நீர்மூழ்கிகள், யுத்த கப்பல்கள், யுத்த விமானங்கள், ஏவுகணைகள், ரேடார் போன்றவற்றை தயாரிக்கும் நிறுவனங்களின் இரகசியங்கள், தரவுகள் திருடப்பட்டுள்ளன.

அத்துடன் FBI, நாசா, Justice Department, Texas மாநில Randolph விமானப்படை தளம், Georgia மாநில Robins விமானப்படை தளம் ஆகியவற்றிலும் இரகசியங்கள், தரவுகள் திருடப்பட்டுள்ளன.

ஒரு தடவை நாசாவில் மட்டும் 17 gigabytes அளவிலான இரகசியங்கள் திருடப்பட்டுள்ளன.