பலஸ்தீன குழுக்கள் ஒற்றுமைக்கு பெய்ஜிங்கில் இணக்கம்

பலஸ்தீன குழுக்கள் ஒற்றுமைக்கு பெய்ஜிங்கில் இணக்கம்

சீனாவின் தலைமையில் சீன தலைநகர் பெய்ஜிங்கில் சந்தித்த பலஸ்தீன குழுக்களான ஹமாஸ், Fatah உட்பட 14  குழுக்கள் இன்று செவ்வாய் தம்மிடையேயான முரண்பாடுகளை தவிர்த்து பலஸ்தீனர் நலன்களுக்காக இயங்க இணங்கியுள்ளனர்.

இது மத்திய கிழக்கில் சீனாவுக்கு கிடைத்த இரண்டாவது பெரிய வெற்றியாகும்.

சில மாதங்களுக்கு முன் பரம எதிரிகளாக இருந்த சவுதிக்கும், ஈரானுக்கும் இடையே நலமான உறவை உருவாக்கி அவை தமது தூதரகங்களை ஆரம்பிக்க வைத்தது சீனாவின் முதல் வெற்றியாகும்.

பலஸ்தீனர் ஒரு தீர்வை பெற அவர்களிடையே ஒற்றுமை அவசியம். ஆனால் இஸ்ரேல் தனது நலனுக்காக PLO வின் அங்கமான Fatah வுக்கு எதிராக ஹமாஸ் வளர உதவிய காலமும் உண்டு.

2006ம் ஆண்டு காசா உள்ளூர் தேர்தலில் ஹமாஸ் வெற்றி பெற்றது முதல் காசாவில் ஹமாஸ் ஆட்சி செய்ய, PLO இஸ்ரேல் கைவிட்ட West Bank பகுதிகளை PLO ஆட்சி செய்கிறது.