பங்களாதேசில் மாணவர் ஆர்ப்பாட்டம், 114 பேர் பலி

பங்களாதேசில் மாணவர் ஆர்ப்பாட்டம், 114 பேர் பலி

கடந்த சில கிழமைகளாக பங்களாதேசில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். போலீசாருக்கும் மாணவருக்கும் இடையிலான மோதல்களுக்கு இதுவரை 114 பேர் பலியாகி உள்ளனர்.

தற்போது பல இடங்களில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ளது. கடந்த வியாழன் முதல் அரசு இணைய சேவையை நிறுத்தியுள்ளது. கடந்த புதன் முதல் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன.

அரச தொழில்களின் 30% பங்கு 1971ம் ஆண்டு அக்கால கிழக்கு பாகிஸ்தான் விடுதலைக்கு போராடியோரின் குடும்பங்களுக்கு ஒதுக்கப்படுவதையே மாணவர் எதிர்க்கின்றனர். விடுதலை அடைந்த கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆகியது.

உண்மை என்னவென்றால் விடுதலைக்கு போராடியோரின் இயக்கமே பின் அரசியல் கட்சியான Awami League. அந்த கட்சியே தற்போது ஆட்சியில் உள்ளது. அதனால் 50 ஆண்டுகளுக்கு முன் விடுதலைக்கு போராடியோர் பெயரில் ஆளும்கட்சி தற்போதும் 30% அரச வேலைவாய்ப்பை கொள்ளையடிக்கிறது.

மாணவர்கள் திறமை அடிப்படையிலேயே அரச வேலைவாய்ப்புகள் வழங்கப்படல் வேண்டும் என்று கூறி போராடுகின்றனர்.

இந்த ஒதுக்கீடு 2018ம் ஆண்டு நிறுத்தப்பட்டு இருந்தாலும், கடந்த மாதம் மீண்டும் நடைமுறை செய்யப்பட்டது.

பங்களாதேஷ் $40 பில்லியன் பெறுமதியான தைத்த ஆடைகளை ஏற்றுமதி செய்கிறது.