நேற்றைய தொழில்நுட்ப இடர் சீனாவை பாதிக்கவில்லை

நேற்றைய தொழில்நுட்ப இடர் சீனாவை பாதிக்கவில்லை

நேற்று உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய Microsoft கணணிகளுக்கான Crowdstrike நிறுவன antivirus update சீனாவை பாதிக்கவில்லை. இது சீனா தன்னை அமெரிக்க தொழில்நுட்பங்களில் இருந்து விடுதலை அடைய செய்து, சொந்த தொழில்நுட்பத்தில் உரப்பானதை காட்டுகிறது. 

நேற்று அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா எங்கும் விமான சேவைகள், விமான நிலையங்கள், வைத்தியசாலைகள், வங்கிகள், வர்த்தகங்கள் மேற்படி update இல் இருந்த வழு காரணமாக இயங்க முடியாது முடங்கி இருந்தன.

இந்தியாவிலும் டெல்லி, பெங்களூர் விமான நிலையங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருந்தன. மும்பாய் விமான நிலையமும் சிறிதளவு பாதிக்கப்பட்டு இருந்தது. Air India, IndiGo, Vistara, SpiceJet போன்ற விமான சேவைகளும் முடங்கி இருந்தன.

ஆனால் சீன விமான நிலையங்கள், விமான சேவைகள், வங்கிகள் இடர்பாடுகள் எதுவும் இன்றி வழமைபோல் இயங்கின.

காரணம் சீனா Microsoft Windows OS கணனிகளை கைவிட்டு openKylin போன்ற தனது சொந்த கணனிகளை பயன்படுத்துவதே. சீன அரச மற்றும் படைகளின் கணணிகள் சீனாவின் சொந்த OS களை மட்டுமே பயன்படுத்தலாம்.