நாளை இலங்கை வருகிறார் அமெரிக்க அட்மிரல் Steve Koehler 

நாளை இலங்கை வருகிறார் அமெரிக்க அட்மிரல் Steve Koehler 

அமெரிக்காவின் பசிபிக் படையணி கட்டளை அதிகாரி (Pacific Fleet Commander) Steve Koehler, ஒரு 4-star அட்மிரல், நாளை வியாழன் (அக்டோபர் 10) இலங்கைக்கு திடீர் பயணம் ஒன்றை செய்கிறார்.

இந்த பயணத்தின் நோக்கம் அமெரிக்காவுக்கும், இலங்கைக்கும் இடையே இருதரப்பு உறவை வளர்ப்பதே என்று அமெரிக்கா கூறினாலும், அதை ஏன் ஒரு திடீர் பயணம் மூலம் செய்யவேண்டும் என்று கூறவில்லை.

பொதுவாக கியூபா போன்ற கம்யூனிஸ்டுகள் மீது காழ்ப்பு கொண்ட அமெரிக்கா இடதுசாரி அரசுகளுடன் உறவை பேணுவதில்லை. அமெரிக்காவை விரட்டிய இடதுசாரிகளின் அரசை கொண்ட வியட்நாம் அதற்கு ஒரு பெரிய விதிவிலக்கு. அதற்கு சீனாவே காரணம்.

ரணில் ஆட்சியில் அமெரிக்காவும், இந்தியாவும் கூட்டாக இலங்கை மீது ஆளுமை செய்த அமெரிக்கா தற்போது தனியே ஆளுமை செய்ய முனைகிறதா? அனுர ஆட்சியில் இந்தியா ஆளுமை செய்ய முடியாது என்று அமெரிக்கா கருதுகிறதா?

ஏற்கனவே அமெரிக்க சனாதிபதி பைடென் இலங்கை சனாதிபதி அநுரவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.