சீனாவுடனான மோதலை தவிர்க்க முனையும் ரம்ப் 

சீனாவுடனான மோதலை தவிர்க்க முனையும் ரம்ப் 

தான் ஆட்சிக்கு வந்தவுடன் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100% இறக்குமதி வரி (tariffs) அறவிடுவேன் என்று தேர்தல் காலத்தில் கூறியிருந்த ரம்ப் தற்போது அவ்வாறு செய்ய விரும்பவில்லை என்று கூறுகிறார்.

அமெரிக்காவின் Fox News என்ற செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய உரையாடல் ஒன்றிலேயே ரம்ப் இதை கூறியுள்ளார்.

அமெரிக்கா சீனாவில் இருந்து ஆண்டுதோறும் சுமார் $500 பில்லியன் பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்கிறது.

அதேவேளை திங்கள்கிழமை executive order மூலம் தடை செய்த birthright citizenship உரிமையை வாஷிங்டன் மாநில நீதிபதி இச்செயல் அமெரிக்க Constitution க்கு முரணானது என்று கூறி ரம்பின் தடையை தற்காலிகமாக தடை செய்துள்ளார்.

சுவிற்சலாந்தின் Davos நகரில் தற்போது இடம்பெறும் World Economic Forum அமர்வில் இணையம் மூலம் உரையாற்றிய ரம்ப் கனடா அமெரிக்காவின் 51வது மாநிலம் ஆவதன் மூலம் இறக்குமதி வரிகளை தவிர்க்கலாம் என்று கூறியபோது அந்த சபையே சிரிப்பில் ஆழ்ந்தது.