சீனாவின் Shein இந்தியாவில் மீண்டும் இரகசியமாக சேவையில்

சீனாவின் Shein இந்தியாவில் மீண்டும் இரகசியமாக சேவையில்

2020ம் ஆண்டு மோதி அரசால் இந்தியாவில் TikTok போன்ற சீன நிறுவனங்கள் தடை செய்யப்பட்டபோது சீனாவின் Shein என்ற மலிவு விலை ஆடை உற்பத்தி நிறுவனமும் தடை செய்யப்பட்டிருந்தது.

ஆனால் சனிக்கிழமை Shein மீண்டும் இந்தியாவில் சேவை செய்ய ஆரம்பித்துள்ளது. இம்முறை Shein செல்வந்தர் முகேஷ் அம்பானியின் Reliance Industries நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாக இயங்குகிறது.

Shein நிறுவனத்தின் இந்தியாவுள்ளான இரண்டாம் வருகை முடிந்த அளவு இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.

2012ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட Shein சீனாவில் மிகப்பெரிய மலிவு விலை ஆடை உற்பத்தி நிறுவனமாகும். ஆனாலும் அமெரிக்கா போன்ற நாடுகளின் இறக்குமதி வரிகளில் இருந்து தப்பிக்க இதன் தலைமையகம் தற்போது சிங்கப்பூருக்கு நகர்த்தப்படுள்ளது.

Shein இந்த ஆண்டு லண்டன் பங்கு சந்தையில் (London Stock Exchange) தனது பங்குகளை விற்பனை செய்யவுள்ளது. அமெரிக்க பங்குச்சந்தையில் இதன் பங்கை விற்பனை செய்யும் முயற்சி கைவிடப்பட்டுள்ளது.