இந்த ஆண்டு முதல் தடவையாக சீனா வெளிநாடுகளுடனான தனது வர்த்தகத்தின் (cross-border payments and receipts) 52.9% த்தை சீனாவின் நாணயமான யுவான் (Yuan) மூலம் செய்துள்ளது.
2010ம் ஆண்டு சீனா 0.3% வர்த்தகத்தை மட்டுமே யுவான் மூலம் செய்திருந்தது. அந்த ஆண்டு 84.3% வர்த்தகத்தை அமெரிக்க டாலர் மூலமும், 15.4% வர்த்தகத்தை பௌண்ட்ஸ், யூரோ போன்ற ஏனைய நாணயங்கள் மூலமும் செய்திருந்தது.
அமெரிக்கா தனது டாலர் மூலம் சீனாவை கட்டுப்படுத்த முனையலாம் என்ற பயத்தால் சீனா அமெரிக்க டாலர் பாவனையில் இருந்து தனது வர்த்தகத்தை விடுவிக்க பல நடவடிக்கைகளை எடுத்தது.
அதன் பயனாக இந்த ஆண்டு சீனா வெளிநாடுகளுடனான தனது வர்த்தகத்தின் 52.9% பங்கை யுவான் மூலம் செய்துள்ளது. இந்த ஆண்டு அமெரிக்க டாலர் மூலம் செய்யப்பட்ட வர்த்தகங்களின் அளவு 42.8% மட்டுமே.
யுவான் பாவனை தொடர்ந்தும் வலுவடைந்து வருகிறது. புதிதாக பிரேசில், அர்ஜெடீனா ஆகிய நாடுகளும் யுவான் பாவனையை ஆரம்பித்துள்ளன.
உலக அளவில் தற்போதும் பெருமளவு வர்த்தகம் அமெரிக்க டாலர், யூரோ, ஜப்பானின் ஜென், பிரித்தானிய பௌண்ட்ஸ் மூலம் செய்யப்பட்டாலும், சீனா தன்னை அமெரிக்க டாலரில் இருந்து வேகமாக விடுவித்து வருகிறது.
2010ம் ஆண்டு முதல் சீன வர்த்தகத்தில் யுவான் பாவனை: