சிரியாவின் சர்வாதிகார சனாதிபதி அசாத் சிரியாவை விட்டு தப்பி ஓடியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அசத்தும் அதற்கு முன் அவரின் தந்தையும் சிரியாவை சுமார் 50 ஆண்டுகள் ஆண்டனர்.
Hayat Tahrir Al-Sham (HTS) என்ற ஆயுத குழு அணியே அசாத்தை இம்முறை விரட்டி உள்ளது. இந்த ஆயுத குழுவுக்கு பின்னணியில் யார் உள்ளனர் என்பது இதுவரை திடமாக அறியப்படவில்லை.
இந்த ஆயுத குழுவில் அல்கைடா உறுப்பினரும் உள்ளனர், முன்னர் துருக்கி மற்றும் மேற்கு நாடுகள் ஆதரித்த உறுப்பினர்களும் உள்ளனர்.
2011ம் ஆண்டு அமெரிக்கா உட்பட பல மேற்கு நாடுகளின் ஆதரவுடன் ஆரம்பித்த Free Syrian Army போன்ற ஆயுத குழுக்கள் அசாத்தை விரட்டி இருக்க முடியவில்லை. அப்போது ஆசாத்தின் உதவிக்கு ரஷ்யா, ஈரான், லெபனானின் ஹெஸ்புல்லா படைகள் வந்திருந்தன.
ரஷ்ய படைகள் தற்போது யூகிரேனில்மாண்டுள்ளன. அதனால் அவை இந்தமுறை ஆசாத்தின் உதவிக்கு வரவில்லை. ஹெஸ்புல்லாவும் இஸ்ரேல் யுத்தத்தில் பலமிழந்து உள்ளது. அதனால் இம்முறை அவர்களும் அசாத்துக்கு உதவ முன்வரவில்லை.
வரும் காலத்தில் சிரியாவை யார் ஆழ்வார்கள் என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது. லிபியா போல் சிரியாவுக்கு ஒரு ஆழ முடியாத, சிதையும் நாடாகலாம். அசாத் ஆட்சியிலும் சிரியா அபிவிருத்தி எதையும் அடைந்திருக்கவில்லை.
மேற்கு நாடுகள் HTS ஆயுத குழுவை ‘rebel’ என்றே அழைக்கின்றன ‘terrorist’ என்று அழைக்கவில்லை.