காசா அமெரிக்கா வசமாகும் என்கிறார் ரம்ப் 

காசா அமெரிக்கா வசமாகும் என்கிறார் ரம்ப் 

காசாவை அமெரிக்கா கைக்கொள்ளும் என்றும் அங்குள்ள பலஸ்தீனர்களை வேறு ஒரு “good , fresh, beautiful  piece of land” நாட்டுக்கு செல்லவேண்டும் என்று கூறுகிறார் அமெரிக்க சனாதிபதி ரம்ப்.

காசா தற்போது கட்டிட இடிபாட்டு குவியல்களை கொண்ட வாழ முடியாத இடம் என்றும் ஏன் அங்கு பலஸ்தீனர் வாழ விரும்புவார்கள் என்றும் ரம்ப் கூறியபோது ஒரு நிருபர் “ஏனென்றால் அது அவர்களின் நாடு” என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்னரும் பலஸ்தீனரை எகிப்தும், ஜோர்டானும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ரம்ப் கூறியிருந்தார். அதாவது காசாவை இஸ்ரேலுடன் இணைக்கும் தமது கனவை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் எகிப்தும், ஜோர்டானும் அந்த திட்டத்தை மறுத்து இருந்தன.

இஸ்ரேல் பிரதமர் வெள்ளைமாளிகை சென்று ரம்புடன் காசா தொடர்பாக உரையாடும்போதே ரம்ப் மேற்படி கருத்தை கூறியுள்ளார்.

ரம்பின் இந்த விளக்கம் இல்லாத, குழப்பமான கதைகளை இஸ்ரேலிய பிரதமர் நகைத்து கேட்டுக்கொண்டிருந்தார்.

கனடா, கிறீன்லாந்து, பனாமா கால்வாய் ஆகியவற்றை கைப்பற்ற உள்ளதாக கூறிய ரம்ப் தற்போது காசாவையும் கைப்பற்ற கனவு காண்கிறார். இவர் கைப்பற்ற கனவு காணும் பட்டியல் மேலும் நீளலாம்.