கனடா, மெக்ஸிக்கோ மீதான புதிய 25% இறக்குமதி வரியை ரம்ப் 30 தினங்களுக்கு இடைநிறுத்தி உள்ளார். Executive order மூலம் நடைமுறை செய்ய முனைந்த புதிய 25% இறக்குமதி வரிகளை அவை நடைமுறைக்கு வருமுன் இன்னோர் executive order மூலம் இடைநிறுத்தி சாதனை படைத்துள்ளார் ரம்ப்.
இதுவரை ரூடோவுடன் கதைக்க மறுத்த ரம்ப் திங்கள் குறைந்தது இரண்டு தடவைகள் உரையாடியுள்ளார். இரண்டாவது தடவை இருவரும் 45 நிமிடங்கள் உரையாடி உள்ளனர். மெக்ஸிக்கோ அதிபருடனும் ரம்ப் உரையாடியுள்ளார்.
கனடா மூலம் பெருமளவு fentanyl என்ற போதை கடத்தப்படுவதாக ரம்ப் தன் அறியாமையை கூறி வருகிறார். கடந்த ஆண்டு 19.5 kg fentanyl மட்டுமே கனடாவில் இருந்து அமெரிக்கா கடத்த முயன்றபோது கைப்பற்றப்படுள்ளது. ஆனால் அதே ஆண்டு 9,570 kg fentanyl மெக்ஸிக்கோ எல்லைகளில் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த விசயங்களில் அறிவு இல்லாத ரம்ப் கனடா அமெரிக்காவின் விவசாய உணவு பொருட்களை கொள்வனவு செய்வதில்லை என்று கூறிவருகிறார். உண்மையில் ஆண்டு ஒன்றில் பல மாதங்கள் குளிரில் உறையும் கனடா தனக்கு தேவையான விவாசாய உணவு பொருட்களின் 57% ஐ அமெரிக்காவில் இருந்தே கொள்வனவு செய்கிறது.