பயங்கரவாதிகள் என மேற்கு நாடுகளால் அழைக்கப்படும் சிரியாவின் HTS என்ற புதிய ஆயுத குழு சர்வாதிகாரி அசாத்தை விரட்டி ஆட்சியை கைப்பற்றிய வேளையில் இஸ்ரேல் சிரியாவுள் நுழைந்து சிரியாவின் நிலங்களை கைப்பற்றி வருகிறது.
முதலில் இஸ்ரேல் சிரியாவின் எல்லையோர Golan Heights என்ற இடத்தில் உள்ள demilitarized zone பகுதிகளையே ஆக்கிரமித்து இருந்தது. இந்த எல்லையோர இராணுவ தவிர்ப்பு பகுதி ஐ.நா.வின் கட்டுப்பாட்டில் இருந்தது.
ஆனால் தற்போது இஸ்ரேல் இராணுவம் எல்லையில் இருந்து சுமார் 10 km தூரத்தில் உள்ள Qatana நகர் வரை நகர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது.
அத்துடன் இஸ்ரேல் கடந்த இரண்டு தினங்களில் தாம் சிரியாவில் 500 குண்டு தாக்குதல்களை செய்ததாகவும் கூறியுள்ளது. தாம் சிரியாவின் ஆயுதங்கள் HTS கைக்கு செல்வதை தவிர்ப்பதாக கூறுகிறது இஸ்ரேல்.
இஸ்ரேலின் மேற்படி அபகரிப்பை மேற்கு நாடுகள் எதுவும் கண்டிக்கவில்லை. சிரியாவில் ஆட்சியை கைப்பற்றி உள்ள HTS ஆயுத குழுவும் இதுவரை இஸ்ரேல் அபகரிப்பு தொடர்பாக எதையும் கூறவில்லை.