கசாவின் வடக்கே உள்ள Beit Lahia என்ற இடத்தில் இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை வீசிய குண்டு ஒன்றுக்கு 93 பேர் பலியாகி உள்ளனர். அதில் 25 பேர் சிறுவர்கள்.
தாம் ஒரு சந்தேக ஒருவரை நோக்கி வீசிய குண்டுக்கு எவ்வாறு 93 பலியாகினர் என்று தெரியாது என்று இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது. ஒருவரை கொலை செய்ய 100 பேரை கொலை செய்யக்கூடிய குண்டை வீசும் இராணுவமா இஸ்ரேல் இராணுவம்?
தாக்குதலுக்கு உள்ளானோர் அப்பகுதியில் உள்ள Kamal Adwan என்ற வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டாலும் அந்த வைத்தியசாலையின் ஊழியர்கள் ஏற்கனவே இஸ்ரேல் இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். வைத்தியசாலை உபகரணங்களும் அழிக்கப்பட்டுள்ளன.
வழமைபோல் இந்த தாக்குதலையும் “horrifying” என்று கூறி ஊளையிட்டுள்ளது அமெரிக்கா.