கடந்த சில கிழமைகளாக Ladakh என்ற இந்திய-சீன-பாகிஸ்தான் எல்லை பகுதியில் இந்திய இராணுவத்துக்கும், சீன இராணுவத்துக்கும் இடையில் ஆயுதம் இன்றிய, தள்ளல், குத்தல் போன்ற சண்டைகள் இடம்பெற்று வருகின்றன. அதனால் இருதரப்பும் மேலதிக படைகளை அங்கு குவித்து உள்ளன.
.
இதை அறிந்த அமெரிக்க சனாதிபதி ரம்ப் தான் நடுவராக இருந்து இந்திய-சீன முரண்பாட்டை தீர்க்க விரும்புவதாக நேற்று கூறி இருந்தார். ஆனால் அந்த உதவியை இந்தியா நிராகரித்து உள்ளது. அத்துடன் தாம் சீனாவுடன் நேரடியாக பேசி சமாதான தேர்ர்வு ஒன்றை அடைய உள்ளதாக இந்தியா கூறி உள்ளது.
.
அதேநேரம் சீனா ரம்பின் கூற்றை கணக்கில் கொள்ளாது முற்றாக தவிர்த்துள்ளது.
.
ரம்ப் முன்னர் இந்திய-பாகிஸ்தான் எல்லை முரண்பாடுகளையும் நடுவாராக செயல்பட்டு தீர்க்கவும் விரும்பி இருந்தார். அதையும் இந்தியா அப்போது மறுத்து இருந்தது.
.
.
வடகொரியா, ஈரான், வேனேசுவேல, பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுடன் தான் கொண்டுள்ள முரண்பாடுகளை தீர்க்க முடியாதா ரம்ப் தன்னால் இந்திய-சீன முரண்பாட்டை தீர்க்க முடியும் என்று கருதுகிறார்.
.