அமெரிக்காவை கைவிட்டு சீனா திரும்பும் விஞ்ஞானிகள்

அமெரிக்காவை கைவிட்டு சீனா திரும்பும் விஞ்ஞானிகள்

அமெரிக்க அரசு, குறிப்பாக ரம்பின் 2016 முதல் 2020 வரையான ஆட்சியும் பின் வந்த பைடென் ஆட்சியும் சீன அமெரிக்கர்களை சந்தேகத்துடன் வேவுபார்த்து, விசாரணை செய்து துன்புறுத்தியதால் அவர்களில் பலர் மீண்டும் சீனா சென்றுள்ளனர்.

இவ்வாறு சீனா திரும்பும் சீன விஞ்ஞானிகளின் எண்ணிக்கை அண்மைக்காலங்களில் 75% ஆல் அதிகரித்து உள்ளது என்று அமெரிக்க Stanford ஆய்வுகள் அறிந்துள்ளன. 2010ம் ஆண்டு 900 சீன விஞ்ஞானிகளே சீனா திரும்பி உள்ளனர், ஆனால் 2021ம் ஆண்டு 2,621 சீன விஞ்ஞானிகள் சீனா திரும்பி உள்ளனர்.

2018ம் ஆண்டு ரம்ப் ஆட்சியில் China Initiative என்ற திட்டத்தின் கீழேயே அமெரிக்காவில் உள்ள சீன விஞ்ஞானிகள் கண்காணிக்கப்பட்டனர். இந்த திட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டோர் பலரும் பின்னர் ஆதாரங்கள் இன்றி விடுவிக்கப்பட்டனர். அமெரிக்க பல்கலைக்கழகங்கள் அழுத்தியதால் 2022ம் ஆண்டு China Initiative திட்டமும் கைவிடப்பட்டது.

சீனாவில் பிறந்த அமெரிக்க chemical engineering விரிவுரையாளரான Franklin Tao அமெரிக்காவின் China Initiative திட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பின் குற்றம் அற்றவராக விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இன்னோர் ஆய்வின்படி அமெரிக்காவில் உள்ள 61% சீன விஞ்ஞானிகள் சீனா திருப்பும் விருப்பம் கொண்டுள்ளனர். ஒரு காலத்தில் 90% சீன விஞ்ஞானிகள் அமெரிக்காவில் வாழ விருப்பம் கொண்டிருந்தனர்.