அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள Reagan National Airport என்ற விமான நிலையத்துக்கு அருகில் American Airlines flight 5342 விமானமும், அமெரிக்க இராணுவ ஹெலி ஒன்றும் வானத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகின.
பயணிகள் விமானத்தில் 60 பயணிகளும், 4 பணியாளரும் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்தில் மரணங்கள் இடம்பெறுள்ளதாக கூறப்பட்டாலும் முழு விபரங்களும் இதுவரை அறியப்படவில்லை. ஹெலியில் 3 படையினர் இருந்துள்ளனர். தேடுதல் பணிகள் தொடர்கின்றன.
விபத்துக்கு உள்ளான பயணிகள் விமானம் ஒரு Bombardier CRJ 700 வகை நடுத்தர விமானமாகும். விபத்துக்கு உள்ளன ஹெலி ஒரு விலை உயர்ந்த Black Hawk ஹெலியாகும்.
அப்பகுதியில் உள்ள சுமார் 24 அடி ஆழமான Potomac ஆற்று பகுதியிலும் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இந்த ஆற்றில் நீரின் வெப்பநிலை தற்போது உறை நிலை அளவில் உள்ளது.
பயணிகள் விமானம் Kansas மாநிலத்து Wichita நகரில் இருந்து வந்துள்ளது.