அமெரிக்காவின் கொழும்பு முதலீட்டை கைவிட்டார் அதானி 

அமெரிக்காவின் கொழும்பு முதலீட்டை கைவிட்டார் அதானி 

அதானி நிறுவனம் கொழும்பு துறைமுகத்தில் அமைக்கும் West Container Terminal திட்டத்தில் அமெரிக்காவிடம் இருந்து பெற இருந்த $553 மில்லியன் முதலீட்டை அதானி தற்போது கைவிட்டு உள்ளது. அதானி மீது அமெரிக்கா மேற்கொண்டுள்ள இலஞ்ச வழக்கே இந்த கைவிடலுக்கு காரணம்,

அமெரிக்காவின் International Development Finance Corporation என்ற அரச ஆதரவு கொண்ட அமைப்பு அதானியின் கொழும்பு துறைமுக திட்டத்தில் $553 மில்லியன் முதலிட இணங்கி இருந்தது. இந்த இணக்கம் அதானி நிறுவனத்துக்கு அமெரிக்கா வழங்கும் பெரும் அங்கீகாரமாகவே கணிக்கப்பட்டது.

மேற்படி அமெரிக்க அமைப்பு சீனாவின் Belt and Road திட்டங்களுக்கு போட்டியான திட்டமாகவே கருதப்பட்டது. ஆனால் தற்போது இந்த அமெரிக்க முதலீடு கிடைக்காது என்று உணர்ந்த அதானியே அதை கைவிட்டுள்ளார்.

அமெரிக்க முதலீட்டுக்கு பதிலாக அதானி தனது சொந்த முதலீட்டை பயன்படுத்த உள்ளதாகவும் அதானி நிறுவனம் கூறியுள்ளது.

மேற்படி அதனியின் தீர்மானத்தின் பின்னும் அமெரிக்காவின் அதானி மீதான விசாரணை தொடருமா அல்லது கைவிடுமா என்பது அமெரிக்காவால் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

அதேவேளை அதானி ரம்பை புகழ்ந்து பாடியுள்ளார். ஆனாலும் அடுத்த மாதம் ஆட்சிக்கு வரும் ரம்ப் அதானி மீதான விசாரணையை கைவிடுவாரா என்பதுவும் அறியப்படவில்லை.