ஹமாஸ் உறுப்பினர் மலேசியாவில் படுகொலை

Malaysia

பாலஸ்தீனரின் விடுதலை இயக்கமான ஹமாஸின் (Hamas) உயர்மட்ட உறுப்பினர் ஒருவர் மலேசியாவில் வைத்து படுகொலை செய்யப்பட்டு உள்ளார். இஸ்ரேலின் மொஸாட் (Mossad) இதை செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
.
பாலஸ்தீன பொறியியலாளர் Fadi al-Batsh, வயது 35, காலை தொழுகைக்காக சென்றுகொண்டு இருக்கையிலேயே மலேசியா நகரில் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார். கொலை செய்தவர்கள் சுமார் 20 நிமிடங்கள் அவ்விடத்தில் காத்திருந்தே கொலையை செய்துள்ளனர்.
.
al-Batsh நோக்கி 10 சூடுகள் செய்யப்பட்டிருந்தாலும், அவரின் உடலில் 4 சூட்டு காயங்கள் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது.
.
சுட்டவர்கள் CCTV படங்களில் பதிவாகி உள்ளதாகவும், அப்படங்களின் உதவியுடன் தாம் சுட்டவர்களை அடையாளம் கண்டு கைது செய்யமுடியும் என்று மலேசியா போலீசார் கூறியுள்ளார்.
.

அண்மையில் ரஷ்யா பிரித்தானியாவுள் புகுந்து, அங்கு வசித்து வந்த முன்னாள் ரஷ்ய உளவாளி ஒருவரை படுகொலை செய்திருந்தது. அப்போது பிரித்தானியா உட்பட பல மேற்கு நாடுகள் கிளர்ந்தெழுந்து ரஷ்யா மீது தடைகளையும் விதித்திருந்தன. ஆனால் மொஸாட் இவ்வாறு மற்றைய நாடுகளுள் புகுந்து படுகொலைகள் செய்யும்போது மேற்கு நாடுகள் பாராமுகத்துடன் இருப்பது வழமை.
.